எனது பாட்டனாரின் ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய படைப்புகளை அவரது நூறாவது பிறந்தநாள், சித்திரை மாதம் விசாகத்தன்று (24 04 2016) அவர் நினைவாக பதிவேற்றப்படுவதுதான் இந்த சிறுதொகுப்பு. கோமான் வெங்கடாச்சாரி செங்கல்பட்டை அடுத்த பொன் விளைந்த களத்தூர் அருகாமையிலுள்ள மணப்பாக்கத்தில் பிறந்தவர். ரசிகமணி தி.க.சிதம்பரநாதரிடம் முறையாக கம்பராமாயணம் பயின்றவர். அவருடன் படித்த மற்றொரு மாணாக்கர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள். அன்றைய நாட்களில் ‘விசாகன்’ என்றும் ‘கோமான்’ என்றும் புனைப்பெயரில் பல்வேறு புதினங்களை, சிறுகதைகளை படைத்தவர். ஆனால் அவைகளில் ஒன்றுகூட இன்று எங்களிடம் கைவசம் இல்லை என்பது துரதிர்ஷடவசமே!. இலக்கியத்திற்காக ‘வீரமுரசு’ என்ற மாத இதழை நடத்தியவர். அவரை போற்றும் விதமாகத்தான் எனது தந்தையும் அவரது தொழிற்சங்கத்தில் ‘வெற்றி முரசு’ என்ற ஏட்டினை நடத்தினார். திரைத்துறை செய்திகளைக் கொண்ட மற்றொரு ஏடு ‘கலா ரசிகன்’. இவரது இதழில் அன்றைய திரையுலக நட்சத்திரம் எம்.கே.டி. பாகவதருக்கு விருது அளித்திட்டபோது அது தவறென சுட்டிக்காட்டி திறமையானவர்களை அடையாளம் காட்டிடவில்லை என எழுதிய கட்டுரைக்கு மறுப்பளிப்பதற்காகவே ‘பய...
Posts
திரும்பி வாராத் தூது - கோமான் வெங்கடாச்சாரி
- Get link
- X
- Other Apps
ஆராமம் சூழ்ந்த அரங்கத்தில் அன்றொரு நாள், பச்சைமா மலைபோல் மேனியும், பவளவாயும் கமலம் போன்ற செவ்வியக் கண்களும் உடைய அந்த அரங்கத்து அரவணையானை கண்குளிரக்கண்டு விட்டு வந்திருந்திருந்தாள், அந்தப் பதினெண்பிராயம் நிறையாத பருவமங்கை. அவனுடைய பரந்தநெற்றியும், அகன்று நீண்டு செவ்வரி படர்ந்த கண்களும், கொவ்வைக் கனிவாயும், பரந்த மார்பும், நீண்ட கரங்களும் மூவுலகை, ஈரடியாக அளந்த திருவடிகளும் விரிஞ்சனை ஈன்ற வனசம் போன்ற திருநாபியும் அவளை அவன்பால் மயக்கமுறச் செய்தன. அவனை மறக்க எண்ணியும் அவளால் மறக்க முடியவில்லை. அதே ஏக்கத்தினால் உடல் மெலிய வானாள். எப்பொழுதும் அரங்கத்தாய், அரவணையாய், அழகிய மணவாளா என்றெல்லாம் தன்மனத்திற்குள்ளேயே சொல்லிச் சொல்லி ஏக்கம் கொள்வாள். உற்றார் உறவினர்கள் இடையே சொல்லிக் கொண்டால் தன் ஒரு தலைக் காதலைக் கண்டு பரிகசிப்பார்களோ என்று அவர்களிடமும் சொல்லாமல் இருந்து விட்டாள். எப்பொழுதும் ஒரு உணர்ச்சியற்ற நிலையில் அவள் இருந்து வந்தாள். அன்றும் அப்படித்தான். அரங்க மாளிகையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தலைவிக்கு அவள் பின்னால் அவளுடைய அருமைத் தோழிகள் வந்து நின்றது கூடத் தெரியவி...
சிற்றூரல் - கோமான் வெங்கடாச்சாரி
- Get link
- X
- Other Apps
அவர் ஒரு புலவர். எங்கிருந்தோ காற்றில் கலந்து வந்த நறுமணம் அவரது உள்ளத்தை மலரச் செய்தது. சுற்றும் முற்றும் பார்த்த அவர் தனக்கு மிக அருகாமலையிலேயே ஒரு தாழம்புதர் இருப்பதையும், அதில் அப்பொழுதுதான் மலர்ந்திருந்த தாழம்பூவின் நறுமணந்தான் அது என்பதையும் உணர்ந்து கொண்டார். அந்த நறுமணத்தை அனுபவித்தவாறே மேலும் நடந்து கொண்டிருந்த அவருடைய நாசி சற்றுத் தொலைவிலிருந்து வேறோர் நறுமணத்தையும் நுகர்ந்தது. அந்த நறுமணம் முன்னதைக் காட்டிலும் சிறப்பாக இருந்ததை அவர் நன்கு கண்டார். ஆனால், அவர் அந்த சிறப்பான நறுமணத்திற்குக் காரணத்தை எளிதல் அறிந்து கொள்ள முடியவில்லை. அந்த நறுமணம் வரும் திசையை நோக்கி மெல்ல நடந்து, அந்த நறுமணத்திற்குக் காரணமான அந்தப் பொருளையும் கண்டார். பெரிய மரம் ஒன்று அங்கேயிருந்தது. அதில் கண்ணிற்குத் தெரியாத அளவில் பூத்துக் குலுங்கும் சின்னஞ்சிறியப் பூக்களைக் கண்டார். முன்னம் கண்ட பெரிய மடல்களைக் கொண்டத் தாழம்பூவின் நறுமணத்தை இந்த சிறிய பூக்களின் நறுமணத்தோடு ஒப்பிட்டு பார்க்க அவர் தவறினாரில்லை. இந்தச் சிறிய பூக்களின் நறுமணம் பெரிய மடல்களைக் கொண்டத் தாழம்பூவின் நறுமணத்தைக் காட்டிலும் எத்தனை சிற...
தேவரும் அழுதனர் - கோமான் வெங்கடாச்சாரி
- Get link
- X
- Other Apps
அசோகவனத்தை அனுமன் அழித்துவிட்டான் அவனுடவன் போரிடச்சென்ற அத்தனை அரக்கர் சேனையும், சம்புமாலி, பஞ்ச சேனாதிபதிகள் முதலானவர்களும் அந்த அனுமானால் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற எதிர்பாராத துயரச் செய்தி அரியணையில் வீற்றிருந்த தசமுகனை கலங்க வைத்துவிட்டது. அரியணையினின்றும் வெகுண்டெழுந்தான். தானே நேரில் சென்று அந்த அற்பக்குரங்கை பிடித்து வருவதாகச் சூள் கொட்டிப் புறப்பட்டான் இலங்காதிபதி. அவனைத்தடுத்து நிறுத்தினான் அந்த அவைக்கண் இருந்த அவனுடைய அருமை மகன் அட்சகுமாரன் என்பவன், “அப்பா தாங்கள் செய்யத் துணிந்த செய்கை சற்றும் பிடிக்கவில்லை. தங்களுடைய வீரமென்ன? மாட்சியென்ன? வந்திருப்பதோ ஒரு அற்பக்குரங்கு. அதைப் பிடித்து வர தாங்களே புறப்பட்டுச் செல்வதானது இலங்கையிலே இனி வீரர் எவருமேயில்லை என்று நம்முடைய பகைவர்களாகிய தேவர்கள் கூட நகைக்கும்படி அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பையல்லவா அளித்து விடும். நான் ஒருவன் இருப்பதை மறந்து விட்டீர்களா? முன்னொரு சமயம் வானுலகம் சென்று தேவேந்திரனை வென்று வருமாறு என் அண்ணன் மேகநாதனை அனுப்பினீர்கள். அதுசமயம் நானும்தான் அந்த அவைக்கண் இருந்தேன். என்னை அனுப்பாமல் என் அண்ணனை அனுப்...
ஒருவயது குழந்தை....
- Get link
- X
- Other Apps
ஒரு வயதுக் குழந்தை மானுடம் கலந்த பசிகள் போல, தந்தையின் தோள்களில் இருக்கமாய் பிணைப்பு அது ஒரு பேருந்துச் சந்திப்பு….. மனித உயிர்கள் எழுபதைத் தாண்டலாம்.. யாரும் அவர்களுக்காக எழுவதைக் காணவில்லை…. நின்ற நபர்களில் நானும் ஒன்று….. யாராவது மடியேந்திக் கொள்ளலாம் என்றாலும், எவர் மடியும் பிடிக்காத ஒரு தகப்பன் குழந்தை…. இதனினும் கொடுமை தாய்க்கு இடம் கிடைத்தும் தாய் மடி சேராத குழந்தை…… அந்தப் பிணைப்பு எனக்குப் பிடித்தது…… அறுபதைத் தாண்டிய ஒரு முதுமை, பிணைப்பை விடு.. நாளை உன் தோள்கள் தோல்விகளை ஏற்காது என்றது…. தோள்கள் தாங்க வேண்டியது தந்தையின் கடமை…. என் மகன் என் உதிரம் என்ற சுயநலம் வேணாமே….. அவன் உலகம் தாண்டும் உயரத்தை ஒதுங்கிக் கூட இரசிக்க்லாமே…. நாளைய தோல்விகளுக்காக இன்றைய வெற்றிகளை இழக்க இயலாது…. அந்தக் குழந்தையை ஏக்கத்துடன் பார்த்தேன்…. அந்தப் பிடிப்பில்தான் அவனது எதிர்காலம்….. பிடித்துப் பிடித்தால் எல்லாம் பிடிக்கும்…. நான் சுமந்த என் குழந்தை, கண்ணீராய் வெளிவந்தது…. இன்னமும் என் குழந்தை எனக்கு குழந்தையாய் இருப்பது அவன் என்னைப் பிடித்துப் பிடித்தது,,,,,, - ...
இராம காதையில் ஓர் திருப்பம் - கோமான் வெங்கடாச்சாரி
- Get link
- X
- Other Apps
“இராமகாதையில் ஒரு திருப்பமா?” என்று இந்த கட்டுரையின் தலைப்பைக் காணும் வாசகர்கள் அதிசயத்துடன் என்னைப் பார்த்து கேட்பது என் செவிகளில் விழத்தான் செய்கிறது. கவியாற்றல் படைத்த கம்பனது இராமகாதையில் அப்படிப்பட்ட திருப்பம் என்ன இருக்கிறது? என்றும் பலர் எண்ணலாம். அவர்களுக்கு இந்நூலை எழுத முற்பட்ட நான் விடையளிக்க கடமைப்பட்டவனாயிருக்கிறேன் என்பதை நன்கு உணராமலில்லை. ஆம். இராமகாதையில் பல திருப்பங்கள் இருப்பதை, நாம் அதை ஊன்றிக் கவனிக்குமளவில் அறிந்துகொள்ள இயலும். அவைகளுக்கு பல சான்றுகள் உள. அவைகளில் முக்கியமான சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு கூர்ந்து நோக்குவோம். முதலாவதாக தசரத சக்கரவர்த்தியால் தீர்மானிக்கப்பட்டு மறுநாள் காலை நடக்கவிருந்த இராம பட்டாபிஷேகம் அதற்கு முதல் நாள் இரவே கூனியின் சூழ்ச்சியால் நிறைவேறாமல் நின்றுவிடுவதை ஒரு திருப்பம் என்றே கொள்ளலாம். தசரதனின் திட்டப்படி இராம பட்டாபிஷேகம் அன்று நடந்திருக்குமானால் இராமன் காட்டிற்குச் செல்வதோ, அங்கு சானகியை பிரிய நேரிடுவதோ, அதன் நிமித்தம் இராவணனை அவனுடைய குலத்தோடு வேரறுப்பதோ நடந்திருக்கக்கூடிய வாய்ப்புகளு...