ஒருவயது குழந்தை....

ஒரு வயதுக் குழந்தை
மானுடம் கலந்த
பசிகள் போல,
தந்தையின் தோள்களில்
இருக்கமாய் பிணைப்பு
அது ஒரு
பேருந்துச் சந்திப்பு…..
மனித உயிர்கள்
எழுபதைத் தாண்டலாம்..
யாரும் அவர்களுக்காக
எழுவதைக் காணவில்லை….
நின்ற நபர்களில்
நானும் ஒன்று…..
யாராவது
மடியேந்திக் கொள்ளலாம்
என்றாலும்,
எவர் மடியும் பிடிக்காத
ஒரு தகப்பன் குழந்தை….
இதனினும் கொடுமை
தாய்க்கு இடம் கிடைத்தும்
தாய் மடி சேராத
குழந்தை……
அந்தப் பிணைப்பு
எனக்குப் பிடித்தது……
அறுபதைத் தாண்டிய
ஒரு முதுமை,
பிணைப்பை விடு..
நாளை உன் தோள்கள்
தோல்விகளை ஏற்காது என்றது….
தோள்கள் தாங்க வேண்டியது
தந்தையின் கடமை….
என் மகன்
என் உதிரம்
என்ற சுயநலம்
வேணாமே…..
அவன்
உலகம் தாண்டும்
உயரத்தை
ஒதுங்கிக் கூட இரசிக்க்லாமே….
நாளைய தோல்விகளுக்காக
இன்றைய வெற்றிகளை
இழக்க இயலாது….
அந்தக் குழந்தையை
ஏக்கத்துடன்
பார்த்தேன்….
அந்தப் பிடிப்பில்தான்
அவனது எதிர்காலம்…..
பிடித்துப் பிடித்தால்
எல்லாம் பிடிக்கும்….
நான் சுமந்த
என் குழந்தை,
கண்ணீராய்
வெளிவந்தது….
இன்னமும்
என் குழந்தை
எனக்கு
குழந்தையாய்
இருப்பது
அவன்
என்னைப்
பிடித்துப் பிடித்தது,,,,,,
- கோமான் இரகுநாதன்

Comments

Popular posts from this blog

அரங்கனைப் பாடிய வாய் - கோமான் வெங்கடாச்சாரி

குறிப்பால் உணர்த்தும் கோசிகன் - கோமான் வெங்கடாச்சாரி

இராம காதையில் ஓர் திருப்பம் - கோமான் வெங்கடாச்சாரி