Skip to main content

Posts

Showing posts from April, 2016
எனது பாட்டனாரின் ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய படைப்புகளை அவரது நூறாவது பிறந்தநாள், சித்திரை மாதம் விசாகத்தன்று (24 04 2016) அவர் நினைவாக பதிவேற்றப்படுவதுதான் இந்த சிறுதொகுப்பு. கோமான் வெங்கடாச்சாரி செங்கல்பட்டை அடுத்த பொன் விளைந்த களத்தூர் அருகாமையிலுள்ள மணப்பாக்கத்தில் பிறந்தவர். ரசிகமணி தி.க.சிதம்பரநாதரிடம் முறையாக கம்பராமாயணம் பயின்றவர். அவருடன் படித்த மற்றொரு மாணாக்கர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள். அன்றைய நாட்களில் ‘விசாகன்’ என்றும் ‘கோமான்’ என்றும் புனைப்பெயரில் பல்வேறு புதினங்களை, சிறுகதைகளை படைத்தவர். ஆனால் அவைகளில் ஒன்றுகூட இன்று எங்களிடம் கைவசம் இல்லை என்பது துரதிர்ஷடவசமே!. இலக்கியத்திற்காக ‘வீரமுரசு’ என்ற மாத இதழை நடத்தியவர். அவரை போற்றும் விதமாகத்தான் எனது தந்தையும் அவரது தொழிற்சங்கத்தில் ‘வெற்றி முரசு’ என்ற ஏட்டினை நடத்தினார். திரைத்துறை செய்திகளைக் கொண்ட மற்றொரு ஏடு ‘கலா ரசிகன்’. இவரது இதழில் அன்றைய திரையுலக நட்சத்திரம் எம்.கே.டி. பாகவதருக்கு விருது அளித்திட்டபோது அது தவறென சுட்டிக்காட்டி திறமையானவர்களை அடையாளம் காட்டிடவில்லை என எழுதிய கட்டுரைக்கு மறுப்பளிப்பதற்காகவே ‘பய